உறவுகள் இருந்திடில் பிரிவிருக்கும் இந்த உலகத்தின் நியதியடா-
பறவைகள் பறப்பது வியப்பில்லையே அது பருவத்தின் செயலுமடா
மறப்பது மனிதனின் இயல்பாகும் அதில மனங்கொள்ளக் குறைகளில்லை
இறப்பது அன்பென இருந்துவிடில் அதிலிருப்பது மகிழ்வில்லையே
சிறப்பது வருங்கால் தித்திக்கலாம் அதில் சிரித்திடு கவலையில்லை
பிறப்பது மனதுள் பெருமையெனில் அதில் பணிவெடு கனமுமில்லை
துறப்பது நற்குணம் உண்மை நிலை யெனில் துயரத்தின் தொடங்குநிலை
கறுப்பது உறவினில் கடுமைகொளின் அந்த காரணம் தெரிதல்முறை
உறுப்பது ஊனமென்றிருந்தாலும் அதில் உயிருண்டு பேதமில்லை
நறுக்கிய இறகுடன் நடனமிட மயில் நகைப்பதில் நீதியில்லை
திறப்பதும் உயிரின் வாசலினை அதன் திறவுகோல் அன்பு வலை
அறத்தொடு கொள்வதும் அழகுஎனில் அதில் அடுத்து தியாகநிலை
உறவுகள் தமைரை நீரின்நிலை கொளல் உயர் பெரு ஞானநிலை
குறைகளை நீக்கிடப் பேசும்நிலை அதில் குறுகிட ஏதுமில்லை
விறைத்திட சிலைமனம் வீண்கவலை அதில் விருப்புடன் திறகதவை
பிறப்பது புரிந்துணர்வான கலை அது வேறில்லை சொர்க்கம்நிலை
No comments:
Post a Comment