அழகான இதயங்கள் அணீசேரலாம்
அதன்மீது சினம்வந்து அரசாளவோபழகாத இதயங்கள் பலம் காணலாம்பரிவென்ற உயிர்கொண்டும் பகைகாணவோஇழகாத மனமென்று இருந்தாலும் சொல்இசையாத மனந்தானே எதிராகிடும்வளர்கின்ற தீயென்று வருமாயிடின்வருங்காலம் சிதைவுற்றுப் போகாதோசொல்புதுவெள்ளம் மனம்மீது பாய்ந்தோடலாம்பிரவாகப் புனல் நெஞ்சைக் அழித்தோடவோசெதுக்காத சிலையென்று திரைமூடலாம்திரும்பாத வழிகண்டும் தொடர்ந்தோடவாஎதுகாண நினைத்தாலும் எழில்சோலைப் பூஇதழுக்கு ஓர் வண்ணம் வேறாகுமாஇதுகாக்க உன் எண்ணம் முடிவென்பதோஇருக்கின்ற வரையின்பம் பெரிதல்லவோமதுகொண்ட மலர் தன்னும்தீ ஊற்றுமோமதிஎன்னும் நிலவென்றும் இருள் போர்க்குமோஇதுவென்ன அழகென்று மனம் கேட்கலாம்இதயத்தின் நலிவெண்ணி நான்வேர்க்கிறேன்\பொதுவாக உடல் நொந்து பகை காணலாம்பிறிதாக இதயத்தின் குரல்கேட்குதேஅது வாழவேண்டுமெனில் அயலோடு நான்அகம்கொள்ளும் உணர்வுக்கு அளவொன்|று வை
No comments:
Post a Comment