யார்க்கும் அன்புமனத் தோற்றம் முகமதில்
ஆக்கும் பெருவித மாற்றம்
சேர்க்கும் புவியிடை வாழ்க்கை தனில் கொளும்
சீற்றம் மறைந்திடக் காற்றும் '
நீர்கொள். அலைதனை நீவும் சுகமெழ
நேர் செய் இனிமைகொள் வாழ்வும்
வேர்க்கும் மேனிதனில் வீசும் தென்றல்தரும்
வேம்பின் நிழல் சுகம் ஒக்கும்
ஆக்கும் பெருவித மாற்றம்
சேர்க்கும் புவியிடை வாழ்க்கை தனில் கொளும்
சீற்றம் மறைந்திடக் காற்றும் '
நீர்கொள். அலைதனை நீவும் சுகமெழ
நேர் செய் இனிமைகொள் வாழ்வும்
வேர்க்கும் மேனிதனில் வீசும் தென்றல்தரும்
வேம்பின் நிழல் சுகம் ஒக்கும்
ஊக்கம் விழிகளில் தேக்கும் தன்னம்பிக்கை
காக்கும் பலமது வாய்க்கும்
ஆக்கும் செயல் நிறை வாக்கும் மகிழ்வினை
யாத்தும் அவை சபையேற்றும்
பூக்கும் உணர்வுகள் கேட்கும் மணியொலி
ஆர்க்கும் பெருமைகள் சேர்க்கும்
காக்கும் மனம் சினம் நீக்கும் நிலை புகழ்
போர்க்கும் வெற்றிகளை ஆக்கும்
காக்கும் பலமது வாய்க்கும்
ஆக்கும் செயல் நிறை வாக்கும் மகிழ்வினை
யாத்தும் அவை சபையேற்றும்
பூக்கும் உணர்வுகள் கேட்கும் மணியொலி
ஆர்க்கும் பெருமைகள் சேர்க்கும்
காக்கும் மனம் சினம் நீக்கும் நிலை புகழ்
போர்க்கும் வெற்றிகளை ஆக்கும்
கூக்கு எனும்குயில் பாட்டும் கூவ அதைக்
கேட்கும் மயில் நடம் பார்த்தும்
தாக்கும் விசமுடை பாம்பும் தனதெண்ணம்
போக்கும் மறந்தயல் ஆடும்
தேக்கும் மூங்கில்களும் தேங்கும் நிலமதில்
திங்கள் ஒளிபுகக் காணும்
ஆக்கும் அமைதியும் ஆற்றல்தனை மலை
ஆகத் திடமென மாற்றும்
கேட்கும் மயில் நடம் பார்த்தும்
தாக்கும் விசமுடை பாம்பும் தனதெண்ணம்
போக்கும் மறந்தயல் ஆடும்
தேக்கும் மூங்கில்களும் தேங்கும் நிலமதில்
திங்கள் ஒளிபுகக் காணும்
ஆக்கும் அமைதியும் ஆற்றல்தனை மலை
ஆகத் திடமென மாற்றும்
பூக்கும் மலர்களின் வாசம் புகமனம்
மீட்டும் வீணையிசை நாதம்
தூக்கம் கொ்ளும் விழிபார்க்கும் கனவுகள்
போக்கும் எதிரிடை நாளும்
மாக்கள் வனமென ஆக்கும் மனங்களில்
மாற்றம்பெறும் சுகமாகும்
தீய்க்கும் உணர்வுகள் ஆற்றும் தண்ணீர்ப் பொழில்
நீர்க்கும் நேர நிகராக்கும்
மீட்டும் வீணையிசை நாதம்
தூக்கம் கொ்ளும் விழிபார்க்கும் கனவுகள்
போக்கும் எதிரிடை நாளும்
மாக்கள் வனமென ஆக்கும் மனங்களில்
மாற்றம்பெறும் சுகமாகும்
தீய்க்கும் உணர்வுகள் ஆற்றும் தண்ணீர்ப் பொழில்
நீர்க்கும் நேர நிகராக்கும்
தாக்கம் உறும்மனம் யார்க்கும் அன்பை நிறை
வாக்கும் முதன்மையை தூக்கும்
நீக்கம் எனில் உளவாக்கும் பொய்மைககளைந்
தோற்றும் கூரென்மதி ஆக்கும்
தீக்கும் மிருள்தனை ஓட்டும்தன்மை யுண்டு
போக்கும் துயர் கனிவாக்கும்
நாக்கும் சொலும்தமிழ் ஏற்றம் பெற உழைத்
தாற்றும் நிலை பெறவேண்டும்
வாக்கும் முதன்மையை தூக்கும்
நீக்கம் எனில் உளவாக்கும் பொய்மைககளைந்
தோற்றும் கூரென்மதி ஆக்கும்
தீக்கும் மிருள்தனை ஓட்டும்தன்மை யுண்டு
போக்கும் துயர் கனிவாக்கும்
நாக்கும் சொலும்தமிழ் ஏற்றம் பெற உழைத்
தாற்றும் நிலை பெறவேண்டும்
No comments:
Post a Comment