பொருள் தந்தாள் பொருமிடவும் செய்தாள் - எனைப்
பூ தொடுத்து மாலை செய்ய விட்டாள்
அருளிலையே ஆயினும் யான் கண்டேன் ஒரு
அற்புதத்தை உள்ளுயிரில்கொண்டேன்
வருமொழிகள் வார்த்தை கண்டு நொந்தேன் - தலை
வாசற்படி மீதடித்து வீழ்ந்தேன்
அருமை அதில அழுதழுது சொன்னேன் - ஆகா
அத்தனையும் பூக்களென்று கொண்டேன்
பெரு உணர்ச்சி உள்ளமதில் ஓட - ஓர்
பிரளயமும் என்னிடையே ஆக
கருமை என இரவு கொண்டபோதும் - என்
கால் நடந்த பாதையிலே தீபம்
திருவென வோர்தெய்வம் காத்த போதும் ஒரு
திருடன் என்றுபயம் அளித்த வேறும்
உருகியதே நெஞ்சமதில் உண்மை- அங்கு
உதிர மலர் கொண்டதென்ன நன்மை
உணர்வுகளில் தீயை ஏற்றி வைத்தாள் - என்
உருவமதில் பேர் இணைத்து விட்டாள்
மணமெடுக்க பூவில் காற்று வீசும் - அந்த
மாலைவெயில் கூடச் சுட்டுஆறும்
கணக்கினிலே கூட்டும் விதம் வேறு ஆயின்
கண்டபதில் ஒன்றுதானே கூறின்
துணி எனவே தெய்வம் தந்த சக்தி அதில்
தோன்ற வைத்ததோ இதற்கு நன்றி
பூ தொடுத்து மாலை செய்ய விட்டாள்
அருளிலையே ஆயினும் யான் கண்டேன் ஒரு
அற்புதத்தை உள்ளுயிரில்கொண்டேன்
வருமொழிகள் வார்த்தை கண்டு நொந்தேன் - தலை
வாசற்படி மீதடித்து வீழ்ந்தேன்
அருமை அதில அழுதழுது சொன்னேன் - ஆகா
அத்தனையும் பூக்களென்று கொண்டேன்
பெரு உணர்ச்சி உள்ளமதில் ஓட - ஓர்
பிரளயமும் என்னிடையே ஆக
கருமை என இரவு கொண்டபோதும் - என்
கால் நடந்த பாதையிலே தீபம்
திருவென வோர்தெய்வம் காத்த போதும் ஒரு
திருடன் என்றுபயம் அளித்த வேறும்
உருகியதே நெஞ்சமதில் உண்மை- அங்கு
உதிர மலர் கொண்டதென்ன நன்மை
உணர்வுகளில் தீயை ஏற்றி வைத்தாள் - என்
உருவமதில் பேர் இணைத்து விட்டாள்
மணமெடுக்க பூவில் காற்று வீசும் - அந்த
மாலைவெயில் கூடச் சுட்டுஆறும்
கணக்கினிலே கூட்டும் விதம் வேறு ஆயின்
கண்டபதில் ஒன்றுதானே கூறின்
துணி எனவே தெய்வம் தந்த சக்தி அதில்
தோன்ற வைத்ததோ இதற்கு நன்றி
No comments:
Post a Comment