கோட்டையிலே கொடிபறக்கப் பாரடா - அங்கு
கொட்டும் முர சோங்குவதும் கேளடா
வாட்டமுறும் தீமைகளைக் காணடா - அவர்
வாழும் துயர் நாம்கொடுத்த தல்லடா
சூட்டினிலே பனி மறையும் ஏதடா - அது
சொல்லிவைத்த விதி இயற்கை யாகுமாம்
காட்டுமலர் பூத்தமணம் காற்றிடை - அது
காவிவரும் நாளிதுவாம் கொள்ளடா
நேர்மையெனில் நேர் இரும்பு பாரடா
சூட்டிய பொன்முடி யெடுத்த நாளடா - அதில்
வாழ்விருளை ஒளியெழுந்து மேவுமா
மூட்டியசெந் தீயெரியக் காண்கிறோம் - அதில்
மூச்சிரைந்து நாம் நடந்தும் தேய்கிறோம்
காட்டிய வர் நீதி கரையேற்றுமா - ஓர்
கரமெழுந்து நேர்மைதனைக் கேட்குமா
பாட்டினிலே துன்ப இருள்போகுமா - இனிப்
பக்குவமாய்க் காய்கனிந்து வீழுமா
வேட்டியினை தூக்கிமடித் தேறுவோம் - அந்த
விதிமலையாம் நாம்கடந்து ஓடுவோம்
கேட்டினிலே ஊறியவர் எம்மிடம் - இக்
கீழ்நிலலைக்கு தள்ள வைத்த காலமும்
சாட்டினிலே ஊருலகம் தேற்றினார் - இச்
சாட்டையடி கண்டுமஞ்சி ஓடுவர்
நாட்டினிலே தர்மம் எழுந்தோங்குமா - இனி
நாம் நடக்க ஒர்வழியும் தோன்றுமா
வீட்டை நினைந்தோர் மகிழ்வும் பொங்குதே - இது
வீதியுடன் நின்றிடுமா சொல்லடா
கொட்டும் முர சோங்குவதும் கேளடா
வாட்டமுறும் தீமைகளைக் காணடா - அவர்
வாழும் துயர் நாம்கொடுத்த தல்லடா
சூட்டினிலே பனி மறையும் ஏதடா - அது
சொல்லிவைத்த விதி இயற்கை யாகுமாம்
காட்டுமலர் பூத்தமணம் காற்றிடை - அது
காவிவரும் நாளிதுவாம் கொள்ளடா
தீட்டியவாள் கையெடுத்த வாழ்வடா - அதைத்
தீண்டியவர் தானுமழி வாரடா
நீட்டிய நல்மென்னிழைத்த நூலதும் - அதுநேர்மையெனில் நேர் இரும்பு பாரடா
சூட்டிய பொன்முடி யெடுத்த நாளடா - அதில்
சோர்ந்து தவழ் தென்றல் புயல் ஆகுமா
வாட்டிய நம் நெஞ்செழுந்து வீங்குமா - நம்வாழ்விருளை ஒளியெழுந்து மேவுமா
மூட்டியசெந் தீயெரியக் காண்கிறோம் - அதில்
மூச்சிரைந்து நாம் நடந்தும் தேய்கிறோம்
காட்டிய வர் நீதி கரையேற்றுமா - ஓர்
கரமெழுந்து நேர்மைதனைக் கேட்குமா
பாட்டினிலே துன்ப இருள்போகுமா - இனிப்
பக்குவமாய்க் காய்கனிந்து வீழுமா
வேட்டியினை தூக்கிமடித் தேறுவோம் - அந்த
விதிமலையாம் நாம்கடந்து ஓடுவோம்
கேட்டினிலே ஊறியவர் எம்மிடம் - இக்
கீழ்நிலலைக்கு தள்ள வைத்த காலமும்
சாட்டினிலே ஊருலகம் தேற்றினார் - இச்
சாட்டையடி கண்டுமஞ்சி ஓடுவர்
நாட்டினிலே தர்மம் எழுந்தோங்குமா - இனி
நாம் நடக்க ஒர்வழியும் தோன்றுமா
வீட்டை நினைந்தோர் மகிழ்வும் பொங்குதே - இது
வீதியுடன் நின்றிடுமா சொல்லடா
No comments:
Post a Comment