நினதருள் பலமொடு தினமதை பெறுவிதநினைவொடு தொழுதிடினும்மனமது மகிழ்வெழ மடியிலினில் தலையிருமகனெனக் களிகொளினும்கனமது முடியினில் கடுகள விலையெனக்கலகலவென மகிழ்ந்தும்எனதுள மதனிடை எது வொரு நெருடலைஎழுபட முயலுவதோவழிபடும் பொழுதுனை வருவது நலமெனும்வளம்பெரு கிடவிருந்தும்விழிகளில் பெருகிடும் ஒளிதனும் குறைவிலைவியன்பெறு வகை தெளிந்தும்பழிகொள அயலிடை பகையிலை உறவுகள்பனிமலர் மெதுமையெனும்வழிபெற நிலையெடு வகைதனும் கொளமனம்வருந்துவ திடையினிலேன்பொழிலிடை அவிழ்மலர் புதுஇதழ் விழிபெறப்புனர்வுறு மனமிழைந்தும்ஒழிதுயர் உலகமும் உனதெனும் சுவைமிகுஉணர்வொடு குரல்எழினும்களிபெரு கிடவதை கறைபடு முடைதனும்கடுகென எடைகொளினும்நினைவெழு முளதிடை நிகழ்வது மெது தினம்நெருடலைத் தருநிலையேன்விழுவதென் இனமிவர் விலகிடும் உரிமைகள்விடுதலை கனவெனிலும்குழுவென உயர்குல குணமுடை தமிழரின்குலவழி பிறந்தனெனும்தழுவிடும் இனிதமிழ் தகைமையில் உயர்மொழிதலைமுறை யிதில்பெரிதும்நழுவிடப் பிறமொழி நடுவினில் வருவதும்நகையல்லப் பெருந் துயரேன்முழுபொழு திசைவுடன் முகைநறு மணமலர்முதிர்விட லெனமுகமும்விழுவது சரமலர் விருதுகள் புகழெனவிருந்துகள் பலபெறினும்கழுவினில் எரிபடும் கயமையின் உணர்வொடுகவலைகள் மனம்கொளலேன்தொழுதிடு முயர்தமிழ் துயருறும் நிலமெனில்துவைபடு மனவதையேன்விழுமலர் கொடிதனில் வெகுஎழி லுறவிதழ்விரிந்திட இருந்திடினும்தழுவிடக் கொடிபடர் தருஇலை யெனிற்தனிதவித்திடு நிலைமனமும்எழுதுசொல் மொழியெனும் இனிதமிழ் அழகுடன்இருந்திட மனம்மலர்ந்தும்முழுஇனம் அழிவுறும் நிலைதனில் கரம்தரும்மனதுடன் எவரில்லை யேன்
Sunday, 6 July 2014
வருத்துதல் ஏன் அன்னையே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment