ஏழு வண்ண மாளிகைமுன் இரவினிலே விளக்குமின்றிஎப்படியோ நானவனைக் கண்டேன்தாழுமுயர் மேகமிடை தானும் விளையாடியவன்தான் ஒழிக்கத் தேடியறி என்றான்வாழுமுல கென்னிலவன் வந்தொழியும் இடமறிவேன்வானத்திலே எப்படி நான் என்றேன்தாழும் முகி லோடுமட்டும் தன்னிடத்தி லில்லையெனத்தலையசைத்து நான் மகிழ்வுகொண்டேன்ஓடியெழுந்தே மறைய உடனெழுந்து தேடுகிறேன்ஒர்முகிலும் நேருருவம் காட்டாநீடியைந்த ஊர்வலத்தில் நேர் பறந்துசெல்ல மனம்நிர்கதிகொண்டென்ன செய்ய என்றேன்தேடியும்நான் காணவிலை திசையெதனப் புரியவிலைதேவிமனங் கொண்டுதவாய் என்றேன்நாடி யொருதீ யெழவும் நல்லொளிர்ந்த சோதியிலேநான்மயங்கக் காதில் ஒன்று சொன்னாள்பூஇருந்தால் தேனிருக்கும் தேனிருந்தால் பூவினுக்கும்’தேடும் வாழ்வில் ஆசைகொள்ளத் தோன்றும்நாவிருக்க ருசியிருக்கும் நானிலத்தில் ஈதுவிதிநானிருக்கும் போது சொல்லிப் போனாள்நீயிருக்க நானிலையேல் நின்னுருவம் காணுவனோநானிருந்தால் தானறிவேன் என்றேநானில்லையோ நீயில்லையோ நானறியேன் காணவில்லைநானிருப்பதோ இல்லையோ என்றேன்நானில்லை நான் எங்குமிலை என்னையும் நீ காண்பதெனநேருவதும் இல்லையென்று சொன்னான்தானிருக்கும் இடமறிந்தேன் நேர் நடந்து கண்டவுடன்தான்மனதில் கோபங்கொண்டு நின்றான்நான் இலையே நன்கறிவேன் நீயுமெனைக் கண்டதென்னநானறியேன் என்றவனைகண்டுநீயிருக்க நான்இலையேல் நெஞ்சில்தெய்வம் காணுமங்கேநிசப்தமே நிகழ்ந்திருக்கும் என்றேன்பூசிரிக்கும் புன்னகைக்கும் போதில் ஒலி தோன்றுவதில்போலிருக்க வேண்டும் நினதுள்ளம்வாயிருக்கும் வார்த்தைகளில் வந்துமௌனம் குடியிருக்கும்வாழ்வி லுன்னை விட்டுநானும்போனால்தேய்விருக்கும் உயர்வுவரும் தேடும் விழி சாந்தமெனும்தெய்வசுகம் ஒன்றுமட்டும்காணதாயெனவே அன்பிருக்கும் தமிழ்கனிந்த மொழியிருக்கும்தாங்குமனம் தெய்வ மன்றோ என்றாள்
Tuesday, 20 January 2015
நான் இருந்தால்...?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment