நீலமலையினின் சோலைக் குயிலொன்றுநின்று பாடுது - அதுநேசமுடன் கூவ வானமழை மீறிச்சோவெனக் கொட்டுதுமேலடி வானிடை மேகம் சிவந்திடமேன்மை கொள்ளுது - அதைமாலைக் கருமிருள் மங்கிடச் செய்துமேமாயம் கூட்டுதுகோலம் அதிவிரை கொஞ்சும் கடலலைகூடி ஓடுது - அதுகொள்ளுங் கரைமணல் துள்ளி விழுந்தபின்கூசித் திரும்புதுசீலத்தொடு மனம் செந்தமிழ்ப் பாட்டினில்சேர்ந்து காணுது - அதைச்சோக மிழைந்தொரு சேதிவந்தே மனம்சோரக் காணுதுவாலைக் கொண்டோரினம் வந்து கிளைதொற்றிவளைந்து தூங்குது - அந்தவேளை கிளை முறிந்தாடி மண்ணில் வீழவெகிழும் குரங்கதுசாலை நடை பாதை தன்னந் தனியொருசீவன் போகுது - அதுசார்ந்து செல்லும் திசை மூங்கில் துளைகாற்றுசூவென் றூதுதுமூலைத் தெருவினில் கோவிலடிக் கடைமாலை தொங்குது - அந்தமாலைகள் சாமியின் தோளையெண்ண மங்கைகூந்தல் ஏறுதுநாலைக் குணம் கொண்ட நாரிகையின் நடைநளினம் போடுது - அதில்நீளக் கிடந்த கல் நேர்விழி. ஏய்த்திடநடை தள்ளாடுது
Tuesday, 20 January 2015
துரதிஷ்டம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment