Sunday 12 May 2013

அலைவாழ்வில் மலைபோலும் திடமான கலைதா


மணிநாத கலை சந்தமெழ ஆடும்சிவனோடு
மலைவாழும் அருள் பார்வதி - உனை
அணிபாத மதில்வீழ்ந்தும்  அழகான தமிழ்கூறி
அறம் மேவ வரம் கேட்டனன்
தணியாத மகிழ்வோடு தலைமீதுபெரும் பாரம்
தனைநீக்கு உளமானதில் -இனி
பிணியாதல்இலதாகப் பெருவான வழிமீது
பறந்தோடும் மகிழ்வாகச் செய்

தணியாத திரையாடு விரியாழி பெருநாகந்
தனைவென்று அணையாகவே - தன்
பணியாக துயர்நீக்கும் பதியான  கலைநீல
படர்வண்ண மொடுநின்றவன்
துணிவோடு இணைபாத மடிகாணு மலைதேவி
துயர்காண அதையோட வை
பிணியான துவழ்கின்ற பெறுமானம் தவறென்று
பிறைவாழ்வை முழுதென்றுசெய்

கணிபாட மொடுகல்வி கலைதாரும் குலதேவி
குளிர்தாம ரைமீதிலே
அணியாகக் கரமேந்தும்  ஒருவீணை யிசைபாட
அருள் தானு  முளம் வேண்டவும்
துணிவான தனையீந்தும் மணிமாலை பொருள் தாரும்
மலைதேவி அலைமங்கை போல்
பணிந்தேன் நல்லுயிரோடு பலகால வாழ்வேங்கும்
பயனீந்து கலை தா வாணி!

No comments:

Post a Comment