Sunday 12 May 2013

அஞ்சலி ஒரு அன்னைக்காக



நீரினில்  தீவந்து பற்றலாம்
  நெஞ்சினுள்  தீ பற்றிக் கொள்ளுதே
வேரின்றிப்  பூமரம்வீழலாம் 
  விட்டுயிர் பூவுடல் வீழவோ
நேரின்றித் தெய்வமும கொள்வதும் 
  நீர்வற்றக் கண்ணீர் வடிப்பதும்
பாரினில் எம்மினப் பாடுதான்
  பார் இதில் நீதியோ  வேறுதான்

எங்களின் அன்பெனும் தெய்வமே
  இன்னும் இதயத்தின் உள்ளேநீ
தங்கியிருக்கையில் தாங்குமோ
  தாயே பிரிந்திடல் ஆகுமோ
பொங்குது கண்களில் நீரெல்லாம்
  போதுமென்ற தினி இல்லைத்தான்
வெங்கனல் இட்டதாய் வாழ்வுதான்
   வேகும் மனதென்றும் சோகம்தான்

போவது வாழ்வி லெல்லோரும்தான்
     போகுமிடம் தெரியாதுதான்
ஆவதுஒன்றென ஆயினும்
  ஆண்டவனே இது நேரமா
பூவது வாடிடும் மட்டும்நீ
    பூமரத்தில் விட்டதில்லையே
நாவதுவற்றக் கதறினோம் 
   நாளிலெம் தாயைப் பறித்ததேன்

கூனியுடல்கொண்டவேளையா
  கொண்டுநடந்திடப் பாரமா?
ஏனிங்கு கூற்றுவன் வந்தனன்
  ஏதும்கேளா தன்னைகொண்டனன்
தானிதை நேர்மையென் றோதவா
  தாங்கவில்லைத் துயர் பாரய்யா
மேனிதுடிக்குது கேளய்யா
 மீண்டுமன்னை விழி காண்போமா

கோடிஒளிமின்ன வான்வெளி 
 கூடிஒன்றாடிடக் கோள்களும்
ஓடிச் சுழன்றிடப் பூமியும்
  உள்ளே உயிர்களின் வாழ்வையும்
ஆடிநடம் புரிஆண்டவா 
   அத்தனையும் செய்தாய் வீணடா
நாடி அன்புகொண்டே வாழ்ந்திட
  நல்லவரை விட்டதில்லையே !

No comments:

Post a Comment