Wednesday 29 May 2013

உழைப்பவனுக்கு ஒன்றுமில்லை


(ஆணும் பெண்ணும் மாறிமாறிப் பாடுவதாக அமைந்தது)

தேய்நிலவாய் வாடிமுகம் தேசுகுறைந் தேமனமும்
தோன்றுவதேன் ஆசை அத்தானே
போயுழுது நாற்றுநட்டு பூமிநம்பி ஆசைப்பட்டு
பொன்விளையும் காத்திருந்தோமே

தூயமனம் கொண்டுமகள்   வாழவழி தைபிறந்தால்
தேடி வரும்  என்றிருந்தோமே
பாயும் நதி கூடும்கடல் பார்த்துமனம் பேதலித்து
பாவை விழி யூற்றி நின்றாளே

நாயலையும் கேடுகெட்டு நல்லழைத்து மாடெனவே
நாமலைந்தும் துன்பம் வந்ததேன்
போயுமவர் ஏய்த்தவர்கள் பொன்னகைகள் மாடி இல்லம்
போகவண்டி என்று கொள்வதென்

மாயமிட்டுத் தெய்வமெங்கள் மனதெடுத்த வாழ்வளித்து
மேவும் சுகம் செய்வதுமுண்டோ
காயமிட்டுத் துன்பமிட்டு காலைவெயில் நாற்றுநட்டு
கண்டபயன் வேர்வை அல்லவோ

சாயமிட்டு வேடமிட்டு சத்தியத்தை கையும்விட்டோர்
சேர்த்து பணம் வழுகின்றாரேன்
தேயவிட்டு திங்களென தேகம்கெட்டும் நேர்மைகொண்டு
 தூங்கியெழென் றெழுதிவைத்தானே

ஓயவில்லை நாள்முழுதும் ஓடிஉழைத் தென்னபயன்
உள்ள உயிர்மிச்சம் ஒன்றதே

தாயெனவே வந்தவளே தங்கமெந்தன் தேவி அதை
தானுமவன் விட்டுவைத்தானே

*****************

No comments:

Post a Comment